இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு ஏழு  ரூவா..

 சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா..

வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா..

வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா..

கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி, சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா..

நினைத்த போதெல்லாம் பறித்து தின்ற சப்போட்டா கிலோ எண்பது ரூவா..

கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..

 ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா..

திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா..

இனி கூடிய விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கிடாரங்காய், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, மாவிலை, நொச்சி, ஆடாதொடா, வில்வம், பவளமல்லி, பப்பாளி இலை, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..

அதோட வேப்பம்பூ, மாம்பூ, மாதுளை பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை பூ, மகிழம்பூ மாதிரி மறந்து போனவை பலவும் இனி வரும்.

இதெல்லாம் என்ன விளைய வைக்க முடியாத அதிசய பொருளா..?

இவ்ளோ விலை விக்குதே, இதை உற்பத்தி செஞ்சு வளர்ந்தது விவசாயியா..?

நம்ம வீட்டிலேயே இதையெல்லாம் வளர்த்தா நம்ம பிள்ளைங்களாவது சாப்பிட கிடைக்குமல்லவா..

வரும் தலைமுறைக்கு சொத்து மட்டும் சேர்த்தா போறாது சொந்தங்களே ..                  
மரங்களை வளர்ப்போம்.


மயிரைழையில் உயிர் தப்பினோம் என்று கேள்விபட்டிருப்போம் யாரேனும் கண்டதுன்டா இதோ காணோளி👇அனைவரும் காணலாம் பயம் தேவையில்லை...சாலையில் கவனம் தேவை 🚘🙏👋

மலையும் மலை சார்ந்த இடமும் - ~குறிஞ்சி~ *குவாரி* 😟

காடுகளும் காடு சார்ந்த இடமும் - ~முல்லை~ *தொழிற்சாலைகள்* 😕

வயலும் வயல் சார்ந்த இடமும் - ~மருதம்~ *ஃப்ளாட்கள்*

கடலும் கடல் சார்ந்த இடமும் - ~நெய்தல்~ *அமிலக்கழிவுகள்*

மணலும் மணல் சார்ந்த இடமும் - ~பாலை~ *லாரிகள்* 😧*#பஞ்சாயத்த ஆரம்பிங்க...*

*ஐயா... என்ட்ற பேரு #விஜய்மல்லையாங்க ...*

*நீ எவ்வளவு வாங்கியிருக்க...?*

*9000 கோடிங்கய்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

              ------------------------------------------------------

*ஐயா.. நான் #அக்னைட்எஜுகேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*315 கோடிங்கய்யா....*

*#தள்ளுபடி தள்ளுபடி..!!*

               ----------------------------------------------------

*ஐயா.. நான் #ஸ்ரீராம்கார்ப்பரேஷன் லிமிடெட் ...*

*நீ எவ்வளவு...?*

*வெறும் 283 கோடிங்கதான்யா...*

*#தள்ளுபடி தள்ளுபடி ...!!*

                -----------------------------------------------

*ஐயா.. நானும் #வாங்கியிருக்கேங்கய்யா...*

*நீ எவ்வளவு கண்ணு வாங்கின...?*

*#காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம எஜுகேஷன் லோன் போட்டு 2 லட்சம் வாங்கினேங்கய்யா...*

*#வேலைக்கு போன உடனே சம்பாதிச்சு கட்டிடுறேங்கய்யா...*

*#ஏண்டா பொறுப்பு இல்லாத நாயே...!!*

*#அரசாங்கத்தில பணம் என்ன மரத்திலயா காய்க்குது...??*

*#நாட்டோடு பொருளாதாரம் என்றா ஆவுறது...??*

*#ஒருமாசத்துக்குள்ள மொத்த பணத்தையும் திருப்பி கட்டுலன்னா குடியிருக்க வூடு இருக்காது ஆமா...*

*#இதுஇந்த நாட்டாமையோட தீர்ப்புடா...*

*#நீதிடா... நேர்மைடா...!!*

*#இதுதான் இப்போதைய #இந்தியாடா"...!!*
மோ(ச)டிடா..!

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சிவ சிவ
'யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள்.பிறருக்கு  தீர்ப்பளிக்கும்  அதிகாரத்தை கடவுள் யாருக்கும் வழங்கவில்லை. விரும்பிய முறையில் வாழ்வு நடத்தும் உரிமை  அனைவருக்கும் இருக்கிறது'-சிவானந்தர்.
இனிய காலை வணக்கம்.வேலைக்கு போய் திரும்பி வந்த  தன் அம்மாவிடம் 5 வயது சிறுமி கேட்டாள் ..

 நம்ம வீட்டு  பீரோ சாவியை ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

 அதைப் போய்  ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
 நம்ம வீட்டு  பீரோல இருக்குற நகை,  பணம் எல்லாம்  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?

ஷ்ஷு....  அதெல்லாம் ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...

உங்க ATM கார்டை  ஆயாகிட்ட ஏம்மா  கொடுத்துட்டுப் போகல..?  என்ன கேள்வி இது..?

நீ சொல்றதெல்லாம்  ரொம்ப முக்கியமான பொருள்.  அதையெல்லாம்  ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...  "

அப்போ ஏம்மா என்ன மட்டும் ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் முக்கியமில்லையா..? " 

 இம்முறை  அம்மாவிடமிருந்து பதில் இல்லை.  கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது...!
ஒரு வேலைக்கு  ஆள்காரன் போனால் அத்துவானம், தன் மகன் போனால் மத்திமம், தானே செல்வது உத்தமம்.எப்பணியாக இருந்தாலும் தானே சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும், அப்பொழுது மட்டுமே பணிகள் நல்லமுறையில் நடைபெறும்.
இனிய காலை வணக்கம்
Blogger இயக்குவது.